ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க 12-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க 12-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை வரும் 12-ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2-ஐ எழுத விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அரசு விதிகளின்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிப்பதற்கு தாள் 1 தேர்வினை எழுதுவதற்கு 12-ம் வகுப்பில் 50 விழுக்காடு பெற்றிருக்க வேண்டும்.
2-ம் தாளான 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்கு, பட்டப்படிப்பில் 45 சதவிகித விழுக்காடு மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். இதற்காக www.trb.tn.nic.in என்கிற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாயும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 250 ரூபாயும் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (ஏப்.5) கடைசி நாள் என தெரிவித்திருந்த நிலையில், 3.63 லட்சம் பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுத் தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 15-03-2019 முதல் 5-04-2019 மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது. தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் கோரி முறையீடுகள் தொடர்ந்து பெறப்பட்டு வருவதால், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் 12 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in