Published : 24 Sep 2014 10:12 AM
Last Updated : 24 Sep 2014 10:12 AM

மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடம்: சென்னை, கோவை குடிநீர் திட்டங்களுக்கு ஒப்புதல் - முதல்வர் தலைமையிலான தமிழக கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய கூட்டத்தில் முடிவு

தமிழகத்தில் கோவை, சென்னை நகரங்களுக்கான குடிநீர்த் திட்டங்கள், தென் மாவட்டங்களுக்கான தொழில் வழித்தடம் உள்ளிட்ட பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத் தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று அமைச் சரவைக் கூட்டம் நடைபெற்ற பிறகு, தமிழக கட்டமைப்பு மேம்பாட்டு வாரியக் கூட்டம் நடந்தது. அதில் பல ஆயிரம் கோடியில் உருவாக் கப்படும் திட்டங்களுக்கு அதிகாரப் பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டது. அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகள் பற்றிய விவரங்கள் வருமாறு:

தொலைநோக்குத் திட்டம் 2023-ன் 2-வது பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 217 கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் 173 திட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் வெவ்வேறு கட்டங்களில் இருப்பது பற்றியும், 64 திட்டங்களுக்குப் பணிகள் தொடங்கப்பட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதுபோல், கோவை நகரில் 1.5 லட்சம் வீடுகளுக்கு ரூ.556.57 கோடியில் 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை செய்வதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட் டம் கட்டி-ஒப்படைக்கும் முறையில் செயல்படுத்தப்படும்.

சென்னை அருகில் பேரூரில் ரூ.4,070 கோடியிலும், நெம்மேலி யில் ரூ.1,371 கோடியிலும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங் களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து நிதி கோர முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடத்துக்கான திட்ட வடிவ மைப்புக்கும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டம் ரூ.1,83,819 கோடியில் செயல்படுத் தப்படும்.

தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ல் உருவாக்கப் பட்டுள்ள திட்டங்களைச் செயல் படுத்த ரூ.15 லட்சம் கோடி தேவைப்படுகிறது. அதற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங் கள், தனியார் நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படக்கூடிய தமிழ்நாடு தொழில் நிதி மேலாண்மை நிறுவனத்தை அமைப்பதற்கும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், தொலைநோக்குத் திட்டம் 2023-ன் 3-வது தொகுதிக் கான வரைவு அறிக்கைக்கும் ஒப்புதல் தரப்பட்டது.

தமிழ்நாடு அடிப்படை வசதிகள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கவும், வரும் நிதியாண்டுக்கு திட்டங்களை வடிவமைப்பதற்காக ரூ.200 கோடி தரவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நிதி, மின்சாரம், உள்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, தொழில், நெடுஞ்சாலை, போக்குவரத்து, ஊரகத் தொழில்கள், சுற்றுலா, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் துறைகளின் செயலாளர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செய லாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். மின்கட்டணம் உயர்ந்தாலும் மக்களுக்கு மானியம் வழங்கி கட்டண உயர்வைத் தடுப்பது பற்றியும், கிரானைட் ஊழல் தொடர்பாக சகாயம் தலைமையில் நீதிமன்ற விசாரணைக்கு உத்தர விடப்பட்டிருப்பது பற்றியும், மேலும் சில முக்கிய பிரச்சினைகள் பற்றியும் அப்போது விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x