கோமதி மாரிமுத்துவுக்கு ஏன் நிதியுதவி அறிவிக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

கோமதி மாரிமுத்துவுக்கு ஏன் நிதியுதவி அறிவிக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
Updated on
1 min read

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதாலேயே, கோமதி மாரிமுத்துவுக்கு நிதியுதவி அறிவிக்கவில்லை என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (திங்கள்கிழமை) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக அரசு நிதியுதவி அறிவிக்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது அதிமுக அரசு மட்டுமே. வேறு எந்த அரசும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. இப்போது நிதியுதவி அறிவிக்க வேண்டும் என்றால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி வேண்டும். அனுமதி வந்தவுடன் மகிழ்ச்சி கொள்ளத்தக்க வகையில் அவருக்கு எல்லா உதவிகளையும் செய்வதற்கு முதல்வர் தயாராக் இருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்தவுடன் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும்" என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in