Published : 09 Apr 2019 12:00 AM
Last Updated : 09 Apr 2019 12:00 AM

தேனியில் தேனீயாக பறந்த ஈபிஎஸ்- ஓபிஎஸ் மகனுக்காக 14 இடங்களில் பிரச்சாரம்

துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடும் தேனி மக்களவைத் தொகுதியில் 14 இடங்களில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார், தேனிமக்களவைத் தொகுதியில் போட்டி யிடுகிறார். அவரை எதிர்த்து அமமுகசார்பில் கொள்கை பரப்புச் செய லாளர் தங்க தமிழ்ச்செல்வன், காங் கிரஸ் சார்பில் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் போட்டியிடுவதால் இத்தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஓபிஎஸ் மகனுக்கு ஆதரவு கேட்டு பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி தேனியில் பிரச்சாரம் செய்கிறார். ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 12-ம் தேதி ஆண்டிபட்டியில் பிரச்சாரம் செய்கிறார்.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்துவரும் முதல்வர் பழனிசாமி, இடைத்தேர்தல்கள் நடைபெறும் பேரவைத் தொகுதிகள் அடங்கிய மக்களவைத் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். அதிலும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடும் தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 14 இடங்களில் பிரச்சாரம் செய்தார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பரமக்குடி (தனி) சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தாலும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து 3 இடங்களில் மட்டுமே முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்தார். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தாலும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து 7 இடங்களில் பிரச்சாரம் செய்தார்.

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து 7 இடங்களில் பிரச்சாரம் செய்தார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் சாத்தூர் பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தா லும் அங்கு தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து 10 இடங்களில் பிரச்சாரம் செய்தார்.

அதேபோல், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நிலக்கோட்டை (தனி) பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தாலும் அங்கு போட்டியிடும் பாமக மக்களவை வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து 5 இடங்களில் பிரச்சாரம் செய்தார்.

தேனி மக்களவைத் தொகுதியில் ஆண்டிபட்டி பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தாலும், அதிமுக வேட்பாளரும் ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து 14 இடங்களில் பிரச்சாரம் செய்தார். தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், மகனை வேட்பாளராக்கியது அதிமுகவிலும் வாரிசு அரசியல் தலைதூக்குவதாக அக்கட்சியினரால் பரவலாக பேசப்படுகிறது.

இந்நிலையில் அவரது மகனின் வெற்றியை தமிழகமே கவனித்து வருகிறது. இதற்கு வலுவூட்டும் வகையில் முதல்வர் பழனிசாமி 14 இடங்களில் பிரச்சாரம் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x