ஜே.கே.ரித்தீஷ் மறைவு: ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரங்கல்

ஜே.கே.ரித்தீஷ் மறைவு: ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரங்கல்

Published on

ஜேகே. ரித்தீஷ் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகரும், முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்தீஷ் தற்போது அதிமுகவில் இருந்தார். ராமநாதபுரத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக போகளூர் என்கிற இடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது மரணத்திற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்சும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இரங்கல் அறிக்கை வருமாறு:

அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளரும், ராமநாதபுரம் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திரைப்பட நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துவிட்டார் என்ற செய்திக்கேட்டு ஆற்றொணாத் துயரம் அடைந்தோம்.

கட்சித்தலைமையின்மீது விசுவாசத்துடன் பணியாற்றி வந்த ஜே.கே.ரித்தீஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு ஒபிஎஸ், இபிஎஸ் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in