நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்; ஏப்.27, 28 தேதியில் புயலாக மாற வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்; ஏப்.27, 28 தேதியில் புயலாக மாற வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

நாளை தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்றும், 27, 28 தேதிகளில் அது புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“ஏப்.25 அன்று (நாளை) தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் இது வரும் 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

மேலும், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வரும் ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுபெற்று தற்போதைய நிலவரப்படி தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

மீனவர்கள் ஏப்ரல் 26-ம் தேதி முதல் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.  கடந்த 24 மணி நேரத்தின் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கோடை மழை காரணமாக மழை பெய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 5 செ.மீ மழையும், வால்பாறையில் 4 செ.மீ மழையும் பெய்துள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in