அரசு மீது மக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை - வெற்றி உறுதி என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் நம்பிக்கை

அரசு மீது மக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை - வெற்றி உறுதி என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் நம்பிக்கை
Updated on
2 min read

தமிழக அரசு மீது மக்கள் மத்தி யில் கெட்ட பெயரோ, அதிருப் தியோ இல்லை. அதனால், இந்த தேர்தலிலும் அதிமுகவுக்கு வெற் றியை வழங்குவார்கள் என்று அதிமுக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் தெரிவித்தார்.

‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் நேற்று அளித்த சிறப்பு பேட்டி:

2014 மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 37 இடங்களைக் கைப் பற்றிய அதிமுகவுக்கு இப்போது தோல்வி பயம் வந்துவிட்டதா?

ஜெயலலிதாவே பல நேரங்களில் கூட்டணி வைத்துதான் தேர்தலை சந்தித்தார். 1991-ல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தார். 1996-ல் அதிமுக தோல்வியடைந்தது. ‘அதிமுகவால் இனி எழுந்திருக்கவே முடியாது’ என்றனர். இரண்டே ஆண்டுகளில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து, பிரதமரை தீர்மானிக்கும் இடத் துக்கு சென்றது அதிமுக. கூட்டணி யால்தான் இது சாத்தியம் ஆனது. அதேபோல, பொது எதிரியான திமுகவை வீழ்த்த கூட்டணி சேர்ந்து தேர்தல் களத்தை சந்திக்கிறோம்.

‘தமிழகத்தில் ஊழல் மிகுந்துள்ளது’ என்று பாஜக தலைவர் அமித்ஷா பேசிய நிலையில், அவருடனே முதல்வர் பிரச்சாரம் செய்யும் சூழல் உருவாகியுள்ளதே?

‘ஓட்டுக்காக நோட்டு என்ற கலாச்சாரத்தை தமிழகத்தில் பார்க் கிறேன். இதை முறியடிக்க வேண் டும்’ என்று ஒரு பொதுவான கருத் தையே அமித்ஷா கூறினார். யாரை யும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

வாரிசு அரசியலை எதிர்த்து தொடங் கப்பட்ட அதிமுகவிலேயே வாரிசு அரசியல். இது முரண் இல்லையா?

திமுகவில் தனக்குப் பிறகு வேறு எந்த தலைவரும் முளைத்துவிடக் கூடாது; தன் குடும்பத்தினர் மட்டுமே வரவேண்டும் என்று பெரிய சூழ்ச்சிவலை பின்னியவர் கருணா நிதி. அதிமுகவில் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், பி.ஹெச்.பாண்டி யன் மகன் மனோஜ் பாண்டியன் என கட்சியினரின் வாரிசுகளுக்கு வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா. தற்போது ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத்துக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. திமுகவின் குடும்ப அரசியலோடு இதை ஒப்பிடக் கூடாது.

எட்டுவழிச் சாலை விவகாரத்தில் மேல்முறையீடு செய்வோம் என்கி றார் அமைச்சர். மேல் முறையீடு கூடாது என்கிறது பாமக. இது கூட்ட ணிக்கு பொருந்தவில்லையே?

வளர்ச்சிப் பாதைக்கான முன்முயற்சியாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து இப்பணியை மேற்கொண்டன. நீதிமன்றம் தற் போது தடை விதித்துள்ளது. மக்கள் வேண்டும் என்றால் திட்டத்தை ஏற்போம். வேண்டாம் என்றால் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தைப்போல, முதல்வர் மீண்டும் அதை பரிசீலிப்பார்.

அதிமுக கூட்டணியை பின்னுக்கு தள்ளும் விதமாகவே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் இருக்கிறதே?

கேள்விகளுக்கு பதில் சொல் வதை வைத்து, வெற்றி - தோல்வியை தீர்மானிக்க முடியாது. மக்களின் உண்மையான கருத்து, தேர்தலின் போது வெளிப்படும். நாங்கள் நேரடியாக களத்தில் இருக்கிறோம். அரசு மீது கெட்ட பெயரோ, அதிருப் தியோ இல்லை. குக்கிராமங்களில் சில இடங்களில் குடிநீர் பிரச்சினை மட்டுமே உள்ளது.

தினகரனுக்கு தொப்பி, குக்கர் சின் னங்கள் போல, ‘பரிசுப்பெட்டி’யும் கவனம் பெற்றுள்ளது. இது அதிமுக வாக்கு வங்கியை பாதிக்காதா?

அதிமுகவின் வாக்கு வங்கி அப் படியேதான் உள்ளது. அதோடு கூட்டணியின் பலமும் சேர்ந்திருப் பதால் வெற்றி உறுதி. தினகர னுடன் இருப்பவர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது வெளிப்படையாக இல்லாதவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர் தினகரன். அதிமுகவில் வளர்ந்து, உயர்ந்த பதவிகளை அனுபவித்துவிட்டு, அதிமுகவையே அழிக்க நினைக்கும் அவரை மக்கள் நிராகரிப்பார்கள்.

வருமானவரித் துறையின் செயல் பாடுகள், எதிர்க்கட்சியை மட்டுமே குறிவைப்பதாக கூறப்படுகிறதே?

திமுக பொருளாளர் துரைமுருக னுக்கு சொந்தமான இடத்தில் கத்தை கத்தையாக பணம் பிடிபட்டது. இந்த வட்டச்செயலாளர், வார்டு என பிரித்து வைக்கப்பட்ட கவர்களில் பணம் இருப்பதை பார்க்கும்போது, திமுகவின் நிலை வெளிப்பட்டுள் ளது. இதில் அரசியல் பழிவாங்கும் நோக்கம் எங்கு வருகிறது? சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியினர் 2 பேர் பணப் பட்டுவாடா செய்து பிடிபட்டனர்.

ஜெ. இல்லாத தேர்தல் பற்றி..

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய ஒற்றைத் தலைமைகளின் கீழ் இயங்கிய இயக்கம் இது. அவர்கள் விட்டுச்சென்ற லட்சியம் மாறாமல், அதிமுகவின் 2 எளிய தொண்டர்கள், எளிய தலைவர்களாக உயர்ந்து, பிரச்சார வேள்வியை முன்வைக்கின்றனர். எம்ஜிஆர் - ஜெயலலிதா போல, தற்போது இபிஎஸ் - ஓபிஎஸ்ஸை மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

அதிமுகவுக்கு மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது?

1996-ல் பிரச்சாரத்துக்கு போகும் போது, மக்கள் அதிருப்தியில் இருந் ததை உணர முடிந்தது. தற்போது மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பதைப் பார்க்கிறேன். நிச்சயம் வெற்றியைத் தருவார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in