Published : 30 Apr 2019 13:10 pm

Updated : 30 Apr 2019 18:18 pm

 

Published : 30 Apr 2019 01:10 PM
Last Updated : 30 Apr 2019 06:18 PM

கருக்கலைப்பின் போது பெண் உயிரிழப்பு: போலி மருத்துவர் மகனுடன் தலைமறைவு

கோவை மாவட்டத்தில் கருக்கலைப்பின்போது பெண் ஒருவர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் நெகமம் அடுத்த மெட்டுவாவி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ். இவரது மனைவி வனிதாமணி (37). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 4 மகன்கள், 1 மகள் உள்பட 5 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், வனிதாமணி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். வனிதாமணி தங்களுக்கு ஏற்கெனவே 5 குழந்தைகள் உள்ளதால் இனி குழந்தை எதுவும் வேண்டாம் என முடிவு செய்து உள்ளார். 

இதையடுத்து வடசித்தூரில் உள்ள மருத்துவர் என்ற பெயரில் போலியாக செயல்பட்டு வந்த முத்துலட்சுமியிடம் தனக்கு குழந்தை வேண்டாம் என கருக்கலைப்பு செய்ய வேண்டும் என போனில் கூறியுள்ளார். இதையடுத்து, முத்துலட்சுமி அவரது மகன் கார்த்திக் ஆகியோர் நேற்று முன்தினம் மெட்டுவாவியில் உள்ள வனிதாமணி வீட்டுக்கு சென்று வனிதாமணிக்கு ஊசி போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து, மீண்டும் வனிதாமணி வடசித்தூரில் உள்ள முத்துலட்சுமி வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு வைத்து வனிதாமணிக்கு கருக்கலைப்பு ஊசி போட்டு உள்ளார். அப்போது வனிதாமணி உடல்நிலை மோசமானது.

இதையடுத்து, வனிதாமணியை தனது காரில் ஏற்றிக் கொண்டு கார்த்திக் உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், பொள்ளாச்சி செல்லும் வழியில் வனிதாமணி உயிரிழந்தார். அதே காரில் வனிதாமணியை மெட்டுவாவியில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டனர். 

இதுகுறித்து வனிதாமணி மகன் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் நெகமம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள முத்துலட்சுமியை தேடிவருகின்றனர். நெகமம் போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மெட்டுவாவி பகுதியில் இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

    கருக்கலைப்புகுற்றம்காவல்துறைதலைமறைவுAbortion Crime TN police

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author