Published : 18 Sep 2014 12:11 PM
Last Updated : 18 Sep 2014 12:11 PM

புற்றுநோயால் பாதித்த ஏழைச் சிறுமியின் நிறைவேறாத ஆசை: விமானத்தை தொட்டுப் பார்க்கவே முடிந்த பரிதாபம்

ரத்தப் புற்றுநோய் பாதிப்பால் வாழும் நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் கோவையை சேர்ந்த ஏழை சிறுமி. தனது கடைசி ஆசையாக விமானத்தில் ஏறி அமர வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

கோவை மாவட்டம் காரமடை வாணியர் வீதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். ஆட்டோ தொழிலாளி. மனைவி மகமுதா. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் ரெஹானா (16). 10-ம் வகுப்பு முடித்துள்ளார். சமீபத்தில் பாலிடெக்னிக் படிப்பில் சேர்ந்த அவருக்கு தொடர்ந்து தொடர் காய்ச்சல், கால்வீக்கம், உணவு சாப்பிட முடியாமை போன்ற பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ரத்தப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், நோய் பாதிப்பு முற்றிவிட்ட நிலையில் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அச் சிறுமி பயணித்துக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். தற்போது, கோவை குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் அச் சிறுமி தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந் நிலையில், தனது வாழ்வில் நிறைவேறாத ஆசைகளில் ஒன்றான விமானத்தில் ஏறி சிறிது நேரம் அமர வேண்டும் என்பதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஏழ்மையான பெற்றோரால் அவரது விருப்பத்தை உடனடியாக நிறைவேற்ற முடியாமல் தடுமாறுவது குறித்து, குப்புசாமிநாயுடு மருத்துவமனை புற்றுநோய் பிரிவு தலைமை மருத்துவர் அரவிந்த்பட்நாயக் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, அறம் அறக்கட்டளை நிர்வாகி ரகுராமுக்கு அரவிந்த்பட்நாயக் தகவல் கொடுத்தார். சிறுமியின் இறுதி ஆசை குறித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்துக்கு கொண்டு சென்றார் ரகுராம். உடனடியாக பீளமேடு காவல் ஆய்வாளர் கோபிக்கு தகவல் அளித்த காவல் ஆணையர், சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கையை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு காவல் ஆய்வாளர், அறம் அறக்கட்டளை நிர்வாகி, சிறுமியின் பெற்றோர், மருத்துவர் ஆகியோர் கோவை விமான நிலையத்துக்கு அந்த சிறுமியை நேற்று அழைத்துச் சென்றனர். ஆனால், அவர்களை முதலில் உள்ளே அனுமதிக்க விமான நிலைய நிர்வாகம் மறுத்துவிட்டது. புதுடெல்லியில் இருந்து அனுமதிக் கடிதம் பெற வேண்டும் என தெரிவித்துவிட்டனர். சிறுமியின் நிலை குறித்து கூறியும் அனுமதிக்கவில்லை. இந்த போராட்டமே சுமார் 2 மணி நேரம் நீடிக்க, இறுதியாக விமான நிலையத்துக்குள் நுழைந்து நிறுத்தி வைக்கப்பட்ட விமானத்தை தொட்டுப் பார்த்து வர மட்டும் நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து, உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு விமானத்தை தொட்டுப் பார்த்து விட்டு வந்தார். ஆனால், விமானத்தில் ஏறி அமர வேண்டும் என்ற அவரது இறுதி ஆசை இன்னமும் நீடிக்கிறது.

இது குறித்து அறம் அறக்கட்டளை நிறுவனர் ரகுராம் கூறுகையில், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி கோவையில் பிரச்சாரத்துக்கு முதல்வர் வந்தார். வாழ்நாளில் அவரை ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டும் என அச் சிறுமியின் விருப்பமாக இருந்துள்ளது. ஆனால், முதல்வர் வருவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக மட்டுமே எங்களுக்குத் தெரிந்ததால் எங்களால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. முதல்வர் வந்து சென்ற இடத்தைப் பார்க்க வேண்டும். அவர் அமர்ந்த இடத்தில் தான் சிறிது நேரம் அமர வேண்டும் என ரெஹானா தெரிவித்தார். இதையடுத்து, அவரை காவல்துறை உதவியுடன் அழைத்துச் சென்று சிறிது நேரம் அமர வைத்தோம். அப்போது, அவர் அடைந்த மகிழ்ச்சி அவரது கண்ணில் தென்பட்டது. ஆனால், விமானத்தில் ஏறி அமர வேண்டும் என்ற அவரது ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x