தவறான பாதையில் வந்த தண்ணீர் லாரி மோதல்: மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலி- சகோதரர் கண்ணெதிரில் பரிதாபம்

தவறான பாதையில் வந்த தண்ணீர் லாரி மோதல்: மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலி- சகோதரர் கண்ணெதிரில் பரிதாபம்
Updated on
1 min read

சென்னை கே.கே.நகரில் தவறான பாதையில் சென்ற தண்ணீர் லாரி மோதியதில் சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலியானார். லாரி ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார்.

சென்னை காட்டுப்பாக்கத்தில் வசிப்பவர் வீரராகவன் (55). தி.நகரில் பங்க் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது சகோதரி சரோஜா(60).

இன்று காலை சரோஜா தனது தம்பி வீரராகவனுடன் தி.நகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை வீரராகவன் ஓட்ட பின்னால் அமர்ந்துச் சென்றார் சரோஜா.

அப்போது தவறான பாதையில் தனியார் தண்ணீர் லாரி வேகமாக வர அதைப்பார்த்து வீரராகவன் தனது மோட்டார் சைக்கிளை ஒதுக்கப்பார்க்க அதில் நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிள் சரிய கீழே விழுந்த சரோஜா மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்புக்கு ஓடிவர லாரி ஓட்டுனர் லாரியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். வீரராகவன் காயமின்றி தப்பினார். தனது கண்ணெதிரில் சகோதரி பலியானதைப்பார்த்து வீரராகவன் கதறி அழுதார்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் சரோஜாவின் உடலை பிரேத பரிசோனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தர்.

லாரியை கைப்பற்றிய போலீஸார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in