Published : 07 Apr 2019 06:34 AM
Last Updated : 07 Apr 2019 06:34 AM

கோவையில் 149 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்; 600 நகை வியாபாரிகள் போராட்டம்: பறக்கும் படை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகள் அடைப்பு

பறக்கும் படை சோதனையில் 149 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை யில் 600 நகை வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக் கப்பட்டதில் இருந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடு கள் அமலில் உள்ளன. தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் மற்றும் ஒளிப்பதிவு குழுவினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வரு கின்றனர்.

இந்நிலையில், கோவை புலியகுளம் மீனா எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடத்தப்பட்ட தணிக்கையில், கோவையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் வேனில் கொண்டு வந்த ரூ.49 கோடி மதிப்புள்ள 149 கிலோ எடை தங்கக் கட்டிகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், கோவையில் உள்ள 7 தங்க நகை தயாரிக்கும் நிறுவனங் களுக்கு, சென்னையில் உள்ள வர்த்தக நிறுவனத்தில் இருந்து தங்கக் கட்டி கள் வாங்கி வந்தது தெரியவந்தது. பின்னர் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

பறக்கும் படையினரின் பறிமுதல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை பெரியகடை வீதி, கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், காந்திபுரம், 100 அடி ரோடு பகுதிகளில் உள்ள சுமார் 600 நகைக் கடைகளை அடைத்து, உரிமையாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியைச் சந்தித்து மனு அளித்தனர்.

இதுகுறித்து கோவை தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.முத்து வெங்கட்ராமன் 'இந்து தமிழ்' செய்தியாள ரிடம் கூறியதாவது: கோவையில் உள்ள நகைக் கடைகளுக்கு தேவையான நகைகள் உரிய வரி செலுத்தி ஆவணங்களுடன்தான் கொண்டு வரப்படுகின்றன. தங்கம் வாங்கி வந்ததற்கான ஆவணங்களை பறக்கும் படையினர் ஏற்றுக் கொள்ள மறுத்ததோடு, நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

வருமானவரித் துறையினர் ஆய்வு மேற்கொண்ட பின்னர், தங்கத்தை திருப்பிக் கொடுப்பதில் ஆட்சேபம் ஏதும் இல்லை என்று தெரிவித்தனர். ஆனாலும் திருப்பி கொடுக்கவில்லை. ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம். வியாபாரிகளும், அதிகாரிகளும் பங்கேற்கும் ஒருங் கிணைப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யு மாறு கேட்டுள்ளோம்.

அதிகாரிகளின் பணிகள் பாதிக்காத வகையில் நாங்கள் ஒத்துழைப்பு அளிப் போம். அதேபோல் தங்க நகை வியாபாரி களின் வர்த்தகம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படையின் பறிமுதல் நடவடிக்கையைக் கண்டித்து கடைகளை அடைத்து போராட் டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் இன்று (ஏப்.6) அரசுக்கு கிடைக்க வேண்டிய ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடு வோம். இவ்வாறு அவர் கூறினார். நகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அபோது உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x