Last Updated : 02 Apr, 2019 12:00 AM

 

Published : 02 Apr 2019 12:00 AM
Last Updated : 02 Apr 2019 12:00 AM

களப் பணிகளில் சுணக்கம் இருந்தாலும் வலைதள பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் தீவிரம்

மக்கள் நீதி மய்யத்தில் முழு அளவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாததால் தொண்டர்களை ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. சென்னை அடுத்த படப்பை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் கடந்த 20-ம் தேதி பிரச்சாரம் செய்யகட்சியினர் உரிய நேரத்தில் வரவில்லை என்று கூறி காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இதனால், இந்த இடங்களில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யவில்லை.

இதுபற்றி கேட்டபோது கட்சியின்மத்திய சென்னை வேட்பாளர் கமீலா நாசர் கூறியதாவது:

கட்சி தொடங்கி 13 மாதங்கள் மட்டுமே ஆகின்றன. ஆனாலும், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பொறுப்பாளர்கள். அவர்கள் ஒவ்வொருவரின் கீழும் 5 பகுதி பொறுப்பாளர்கள், தெருவுக்கு ஒரு களப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கட்சிப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

கமல்ஹாசன் கூறும் கருத்துகள், தகவல்கள் எங்கள் பொறுப்பாளர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட வாட்ஸ்அப் குழு, maiyamconnect செயலி மூலம் கட்சியின்கடைசி நிலை வரை உடனுக்குடன் கொண்டு செல்லப்படுகின்றன. எனவே, சிக்கலின்றி தேர்தல் பிரச்சாரம் நடக்கிறது. இளைஞர்களைக் கவரும் வகையில் வலைதளங்கள் வழியாகவும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x