

வருமான வரித்துறையை வரவேற்கக் காத்திருப்பதாக ப.சிதம்பரம் ஸ்டேட்மென்ட் கொடுத்த நான்கே நாட்களில் அவரது விசுவாசியான படிக்காசு வீட்டுக்கு வந்துவிட்டது வருமானவரித்துறை.
2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது ராஜகண்ணப்பனிடம் சிதம்பரம் நூலிழையில் தப்புவதற்குக் காரணம் இந்த படிக்காசுதான். அப்போது திருமயம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிகளில் சாதி அமைப்புகளுக்கு படிக்காசு செய்த ‘கவனிப்பு’தான் சிதம்பரத்தைக் கடைசி நேரத்தில் காப்பாற்றியது.
இந்த முறை அதற்கு செக் வைக்கவே படிக்காசு வீட்டுக்கு வருமான வரித்துறை அனுப்பப்பட்டது.
ஆனால், அங்கு நடந்த சோதனையில் வெறும் 15 லட்ச ரூபாய் மட்டுமே இருந்ததாம். அதற்கும் படிக்காசு பக்கா கணக்கு வைத்திருந்தாராம்.
“வருமான வரித்துறைக்கே பாஸா இருந்தவரு எங்க பாஸு. அவருக்கிட்ட வந்தா வருமான வரித்துறையினர் டயர்ட் ஆகித்தான் போகணும்; எதுவும் சிக்காது” என்று சிரிக்கிறார்கள் சிதம்பரத்தின் விசுவாசிகள்.