பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது: 91.30 சதவீதம் பேர் தேர்ச்சி: மாணவிகள் 93.64%, மாணவர்கள் 88.57% வெற்றி

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது: 91.30 சதவீதம் பேர் தேர்ச்சி: மாணவிகள் 93.64%, மாணவர்கள் 88.57% வெற்றி
Updated on
1 min read

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. தேர்வு எழுதியவர்களில் 91.30 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் - 1-ம் தேதி தொடங்கி மார்ச் - 19-ம் தேதி முடிவடைந்தது. அதே போல் பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது மார்ச்- 6 ஆம் தேதி தொடங்கி மார்ச்-22 இல் முடிவு பெற்றது. அதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானதும், மார்ச்-14 இல் தொடங்கி மார்ச்-29 நிறைவடைந்தது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்கூட்டியே தேர்வுகள் அனைத்தையும் பள்ளி தேர்வுகளை முடிவுக்கு விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தேர்வு முடிவுகள் வெளியீடு

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்து திட்டமிடப்பட்டபடி இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. . தேர்வு எழுதியவர்களில் 91.30 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர்.

வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகஅளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in இணையதளங்களில் இருந்து அறியலாம். இதுதவிர பள்ளி களுக்கு மின்னஞ்சல் மூலமும், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு குறுந் தகவல் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

பிளஸ் 2 தேர்வர்கள் ஏப்ரல் 20 முதல் 26-ம் தேதி வரை தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து தற் காலிக மதிப்பெண் சான்றிதழை ஏப்ரல் 24-ம் தேதி முதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

இதுதவிர மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் ஏப்ரல் 22 முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக 9 லட்சம் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இணையதளத்திலும் உடனடியாக தேர்வு முடிகள் வெளியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 8ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல்-29 ஆம் தேதியும் வெளியாக உள்ளதாகவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in