

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளோட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:
ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வணிகர்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். தமிழகத்தில் 80 லட்சம் இளைஞர்கள் வேலையின்றி இருக்கின்றனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று சொன்ன பிரதமர் மோடி, 200 பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை. 50 ரூபாய் கேபிள் கட்டணம் செலுத்திய மக்கள் இப்போது ரூ. 300 செலுத்த வேண்டியுள்ளது.தமிழகத்தில் பெண்கள், குழந் தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மோடி தலைமையிலான அரசு மத்தியில் மீண்டும் அமையு மானால், சமூகநீதி குழிதோண்டி புதைக்கப்படும். கற்பனை செய்ய முடியாத ஏதேச்சதிகார ஆட்சி அமைந்து விடும் என்றார்.