மதுரையை, தமிழகத்தை, இந்தியாவை மீட்போம்’’ - இயக்குநர் ராஜூமுருகன் பேச்சு

மதுரையை, தமிழகத்தை, இந்தியாவை மீட்போம்’’ -
இயக்குநர் ராஜூமுருகன் பேச்சு
Updated on
1 min read

மதுரையை மீட்போம். தமிழகத்தை மீட்போம். இந்தியாவை மீட்போம் என்று இயக்குநர் ராஜூமுருகன் மதுரை பிரச்சாரத்தில் பேசினார்.

மதுரையில் சிபிஎம் வேட்பாளரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசனை ஆதரித்து இயக்குநர் ராஜூமுருகன் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

ஏழைத்தாயின் மகன் என்று சொல்லிக்கொண்டே ஏழைகளுக்கு எதிரான அரசை நடத்திக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அவர் அதிகாரம் எனும் விளக்கை தேய்க்கும் போதெல்லாம், அதானிகளும் அம்பானிகளும் அமித்ஷாக்களும் பூதங்களாக வெளியே வருகிறார்கள். இந்த நிலையையெல்லாம் மாற்றவேண்டும்.

அடுத்தும் பாஜக ஆட்சி வந்துவிட்டால், இந்தியாவில் கருத்துரிமை என்பதே இருக்காது. முழுவதுமாக நம்மை நசுக்கிவிடுவார்கள். கருத்துகளைச் சொல்வதற்கு அனுமதி இல்லாத தேசமாகிப் போகும் இந்தியா.

இங்கே, தமிழகத்தில் இ.பி.எஸ். ஓ.பி.எஸ் இருவரும் சேர்ந்து பாஜகவிடம் தமிழகத்தையே அடமானம் வைக்க துணிந்துவிட்டார்கள். மிக மோசமான ஆட்சி இங்கே தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக்கு வாக்களியுங்கள். மதுரை தொகுதியில் எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு வாக்களியுங்கள். அவருக்கு எதிராக அளிக்கும் வாக்குகள் என்பது செல்லாத வாக்குகள் என்று அர்த்தம். எனவே மதுரையை மீட்பதற்காக, தமிழகத்தை மீட்பதற்காக, இந்தியாவை மீட்பதற்காக சு.வெங்கடேசனுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு இயக்குநர் ராஜூமுருகன் பேசினார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in