Published : 21 Apr 2019 02:24 PM
Last Updated : 21 Apr 2019 02:24 PM

‘‘காட்டுமிராண்டித்தனமான செயல்’’ - இலங்கை குண்டுவெடிப்புக்கு பிரதமர் மோடி கண்டனம்

உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், அங்குபல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்த நடத்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்புகளில் 130 பேர் பலியாகியுள்ளனர். 250 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கொலைப்படை  தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தெரிகிறது.

கோழைத்தனமான இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘இலங்கையில் நிகழ்ந்த இந்த கொடூரமான சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதைப்போன்ற காட்டுமிராண்டித்தனத்துக்கு நமது பிராந்தியத்தில் இடமில்லை.

துயரமான இந்த வேளையில் இலங்கை மக்களுடன் இந்தியா துணையாக நிற்கும். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என மோடி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x