Published : 18 Apr 2019 12:38 PM
Last Updated : 18 Apr 2019 12:38 PM

ஆட்சி மாற்றமல்ல அரசியலமைப்பு மாற்றமே தேவை: சீமான் பேட்டி

சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்,  நாட்டின் இப்போதைய தேவை ஆட்சி மாற்றம் அல்ல அரசியலமைப்பு மாற்றம், பொருளாதார கொள்கையில் மாற்றம் என்று கூறினார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள சின்ன கரியப்பா பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் ஆணையம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளது.

வேலூர் தொகுதியில் முறைகேடு செய்த வேட்பாளரை தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டும். கபடி போட்டியில் யார் தவறு செய்கிறார்களோ அவர் தான் வெளியேற்றப்படுவார் அணியில் மற்றவர்கள் விளையாடுவார்கள். அப்படித்தான் வேலூரில் திமுக வேட்பாளரை தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டும்

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தாலோ அல்லது ராகுல் காந்தி ஆட்சிக்கு வந்தாலோ எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அரசியலமைப்பில் மாற்றம் தேவை. பொருளாதார கொள்கையில் மாற்றம் தேவை.

தேர்தல் நடைமுறையிலேயே மாற்றம் தேவைப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா என்று சொல்லிக் கொண்டு வாக்குப்பதிவு முடிந்து 32 நாட்களுக்குப் பின்னர் முடிவை அறிவிக்கப் போகிறார்களாம். நாடு முழுவதும் ஒரே நாளில் தேர்தல் நடத்த இயலவில்லை ஆனால் ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்று பேசுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x