

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலியாக பல மாவட்டங்களில் பேருந்துப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் வீடுகளுக்குச் செல்வதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுமக்கள் இதனால் ஷேர் ஆட்டோக்களை நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 5 கிமீ தூரம் செல்ல ஷேர் ஆட்டோக்களில் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
தெற்கு மாவட்டங்களில் ரயில்களைப் பிடிக்க பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் சென்னை வரும் ரயில்களுக்கு கடும் கூட்டம் முண்டியடிப்பதாக செய்திகள் வந்துள்ளன.
நாளை சென்னையில் நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது பற்றிய அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.