அன்புமணியை அமைச்சர் ஆக்கியவர் கருணாநிதி- ராமதாஸுக்கு மு.க.ஸ்டாலின் பதில்

அன்புமணியை அமைச்சர் ஆக்கியவர் கருணாநிதி- ராமதாஸுக்கு மு.க.ஸ்டாலின் பதில்
Updated on
2 min read

மத்திய அமைச்சராக அன்புமணியை உட்கார வைத்தவர் கருணாநிதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அசோகன் ஆகியோரை ஆதரித்து சோளிங்கரில் நேற்று பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வன்னியர் சங்க கல்வி அறக்கட்டளையின் பல்வேறு சொத்துகளை எல்லாம் தனது குடும்ப சொத்துகளாக ராமதாஸ் மாற்றிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, திருச்செந்தூர், தென்காசி, குற்றாலம், சிதம்பரம், சென்னையில் இருக்கும் வன்னியர் சொத்துகள் அனைத்தும் ராமதாஸின் துணைவியார் பெயரில் உள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் முதல்வரிடம் உள்ளது. தமிழக அரசு நினைத்தால் அவற்றை கைப்பற்ற முடியும். இதில் இருந்து சொத்து களை காப்பாற்றவே அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார் ராமதாஸ். அவர் தன்னையும், குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள எதை யும் செய்யக்கூடியவர்.

திமுகவை விமர்சிக்கும் தகுதி அவருக்கு இல்லை. ‘திமுக வன்முறைக் கட்சி. திமுகவின் கதை இத்துடன் முடிந்துவிடும்’ என்கிறார். 2009 மக்களவைத் தேர்தலில் 7 இடங்களில் போட்டி யிட்டு தோற்ற அவர்கள் நம்மைப் பார்த்து, 4-வது இடம் கிடைக்கும் என்கின்றனர்.

அவர் சொல்லித்தான் எனக்கு துணை முதல் வர் பதவி கிடைத்ததாக கூறுகிறார். எனக்கு அந்த தகுதி இருக்கிறது என்பதால்தான் பரிந் துரை செய்தீர்கள். 50 ஆண்டுகள் இந்த இயக்கத்துக்காக பாடுபட்டு, படிப்படியாக முன்னேறி வந்துள்ளேன்.

ஆனால், பாமகவை சட்டப்பேரவைக்கும் மக்களவைக்கும் அனுப்பிவைத்தது கருணா நிதி என்பதை மறந்துவிட்டீர்களா? மாநிலங் களவை உறுப்பினரான அன்புமணிக்கு கேபி னட் அமைச்சர் பதவி கொடுக்க முடியாது என்று மன்மோகன் சிங்கும், சோனியா காந்தி யும் திட்டவட்டமாக சொல்ல, உடனே கோபித்துக்கொண்டு டெல்லியில் இருந்து கிளம்பிவிட்டீர்களே பெரிய அய்யா, மறந்து விட்டதா? கருணாநிதி உங்கள் கையைப் பிடித்து, ‘உங்கள் மகனை மத்திய அமைச்ச ராக உட்கார வைக்க வேண்டியது என் பொறுப்பு’ என்றாரே. மன்மோகன் சிங், சோனி யாவிடம் வாதாடி, போராடி மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக அன்பும ணியை உட்கார வைத்தவர் கருணாநிதி. இன்று திமுகவை கொச்சைப்படுத்தி பேசுகிறீர்கள்.

இத்தனை ஆண்டுகளாக வன்னியர் சமுதாயத்துக்காக நீங்கள் செய்த சாதனையை சொல்ல முடியுமா என்று சவால் விடுகிறேன். உங்கள் குடும்பத்தைத் தவிர வேறு யாரா வது முன்னேற்றம் அடைந்துள்ளனரா? அதிமுக அரசின் 18 வகையான ஊழல் குற்றச்சாட்டு களை ஆளுநரிடம் அன்புமணி மனுவாக கொடுத்துவிட்டு, அந்த ஆட்சியுடன் கூட்டணி சேர்ந்தது நியாயமா?

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

‘‘நான் இந்து விரோதி அல்ல.. என் மனைவி தினமும் கோயிலுக்கு செல்பவர்’’

ஸ்டாலின் பேசும்போது, ‘‘திமுக பற்றி சிலர் இன்றைக்கும் விமர்சனம் செய்கின்றனர். திட்டமிட்டு சில பத்திரிகைகள் ஏதோ நாங்கள் இந்துக்களுக்கு எதிரி மாதிரியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆண்டவர்களுக்கு எதிராக நாங்கள் என்றைக்கும் இருந்தது இல்லை. ‘நாங்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, ஆண்டவன் எங்களை ஏற்றுக்கொள்கிறார். அதுவே போதும்’ என்று கருணாநிதி கூறியிருக்கிறார். 1953-ல் ‘பராசக்தி’ திரைப்படத்தில், ‘கோயில்கள் கூடாது என்பதற்காக அல்ல; கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது’ என்று சிவாஜி வசனம் பேசுவார். அதுதான் எங்கள் கொள்கை. நாள் தவறாமல், என் துணைவியார் கோயிலுக்குச் செல்கிறார். அதை நான் தடுத்தது இல்லை. அது அவரது விருப்பம். மற்றவர் சுதந்திரத்தில் நான் தலையிடுவது இல்லை. ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு இந்துக்களுக்கு திமுக விரோதியாக இருக்கிறது என்று பிரச்சாரம் செய்கின்றனர். எல்லா மதத்துக்கும் நான் பாதுகாவலனாக இருப்பேன். ஜாதி, மதங்கள் பார்க்க மாட்டேன்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in