

பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளைச் செய்தவர்கள் யார் என்பதை மே 23ம் தேதிக்குப் பிறகு ஆதாரங்களுடன் வெளியிடுவேன் என டிடிவி.தினகரன் பேசினார்.
நாமக்கல் தொகுதியின் அமமுக வேட்பாளர் சாமிநாதனுக்காக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
அமமுகவில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். அங்கே, டெண்டர்காரர்கள்தான் இருக்கிறார்கள். இங்கே இருக்கும் தொண்டர்கள், அங்கே இருக்கிற டெண்டர் ஆட்சியாளர்களுக்கு இந்தத் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள். கல்லாப்பெட்டிகளை வீட்டுக்கு அனுப்ப, பரிசுப்பெட்டிக்கு வாக்களியுங்கள்.
பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளைச் செய்தது யார் என்பது குறித்து மே 23ம் தேதிக்குப் பிறகு ஆதாரங்களுடன் வெளியிடுவேன்.
இவ்வாறு டிடிவி.தினகரன் பேசினார்.