ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து முடிக்கப்பட வேண்டும்; அதுதான் ஒரே சவால்: கனிமொழி பேட்டி

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து முடிக்கப்பட வேண்டும்; அதுதான் ஒரே சவால்: கனிமொழி பேட்டி
Updated on
1 min read

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "திமுக - காங்கிரஸ் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் மிகச்சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தத் தேர்தல், நம் நாட்டின் ஜனநாயகத்தை அரசியலமைப்புச் சட்டத்தை மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டிய தேர்தல்" என தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கனிமொழி, "பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அதனை சரிசெய்வதாக சொல்கிறார்கள். உண்மையிலேயே இயந்திரக் கோளாறா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தேர்தல் ஆணையம் ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியை போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு பல பிரச்சினைகள், குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பாடுகள் இருக்கின்றன. எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து தாக்குவதும், அவர்களை மட்டுமே ரெய்டுகள் மூலம் அச்சுறுத்துவதும் மிக தெளிவாகத் தெரிகிறது

தூத்துக்குடி தொகுதியில் அசம்பாவிதங்கள் இன்றி வாக்குப்பதிவு நடைபெறுவதாக, திமுக மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்" என்று கனிமொழி கூறினார்.

இதன்பின், உங்கள் முன் உள்ள சவால் என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "ஜனநாயக முறைப்படி இந்த தேர்தல் நடந்து முடிக்கப்பட வேண்டும். அது தான் ஒரே சவால், வேறு எதுவும் இல்லை" என்றார், கனிமொழி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in