Published : 25 Apr 2019 07:56 AM
Last Updated : 25 Apr 2019 07:56 AM

உதகையில் கோடை விழா ரத்து

கோடை சீசனை முன்னிட்டு மே மாதம் முழுவதும் உதகையில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், மே மாதம் 17, 18, 19, 20 மற்றும் 21-ம் தேதிகளில் 123-வது மலர்க் கண்காட்சியும், மே 25 மற்றும் 26-ம் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61-வது பழக்காட்சியும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற கண்காட்சிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ரோஜா கண்காட்சி உட்பட பிற கண்காட்சிகள் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ், ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘தேர்தல் நன்னடத்தை விதிகளால், டெண்டர் உட்பட பிற பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. எனவே ரோஜா கண்காட்சி, வாசனை திரவியம் மற்றும் காய்கறிக் கண்காட்சி இந்த ஆண்டு நடத்த முடியவில்லை’’ என்றார். சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறியபோது,

‘தேர்தல் நன்னடத்தை விதி அமலில் இருந்ததால், கோடை விழாவுக்கான முன்னேற்பாடுப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே இந்த ஆண்டு கோடை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x