

‘தேர்தல் காலத்தில்தான் அரசியல் வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணம் குறித்த தகவலை கட்சி தொண்டர்களே தெரிவிப்பார்கள்’ என்று வருமான வரித் துறையின் முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது நண்பருக்குச் சொந்த மான இடங்களில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் சிக்கியது. தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரை மிரட்டவே வருமானவரித் துறையினர் சோதனை நடத்துவதாக ஆளும் கட்சியினர் மீதும் புகார் கூறப்படுகிறது. இதுகுறித்து வருமானவரித் துறை யில் உதவி ஆணையராகப் பணி புரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி கிருஷ்ணகுமார் கூறியதாவது:
அரசியல்வாதிகள் மற்றும் அவர் களுக்கு உதவி செய்யும் தொழில் அதிபர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் தேர்தல் நேரத்தில் மட்டுமே அப்பட்டமாக வெளியே வரும். அந்தப் பணம் குறித்து தகவல் கொடுக்க, கட்சி தொண்டர்கள் சிலரையே நாங்கள் தயார் செய்து வைத்து இருப்போம்.
அப்படி அவர்கள் கொடுக்கும் தகவல் உறுதியாக இருக்கும்பட்சத் தில் மட்டுமே, நாங்கள் சோதனையில் ஈடுபடுவோம். ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என்றெல்லாம் இதில் பாரபட்சம் பார்க்க மாட்டோம். தகவலின் நம்பகத் தன்மையைப் பொறுத்து முதலில் சோதனை நடத்தி, பணத்தை கைப் பற்றி விடுவோம். அந்தப் பணம் ஆளும் கட்சியினருடையதாக இருந் தால் அவர்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பிப்பார்கள். அதன்பின்னர் உயர் அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வோம்.
தேர்தல் நேரத்தில் பிடிபடும் பணம் குறித்த வழக்கு விசாரணை யில் பெரும்பாலும் அரசியல்வாதி களின் பினாமிகளே அதிகமாகச் சிக்கு கின்றனர். அவர்களும், பிடிபடும் பணத்துக்கான அதிகபட்ச அபராதத் தொகையைக் கட்டிவிட்டு தப்பித்து விடுகிறார்கள். யாருக்குமே உரிய தண்டனை கிடைத்ததில்லை.