

வாக்குப்பதிவு பாதுகாப்புக்கு 1 லட்சம் போலீஸார் உள்ளனர் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. என திமுக புகார் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தலைமை செயலகத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:
வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் முடிவெடுத்துள்ளதாக திமுக அளித்துள்ள புகார் மீது என்ன நடவடிக்கை?
இதுவரை அமைதியாகத்தான் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் எதுவும் இல்லை. ஆகவே எந்தவித அசம்பாவிதமும் இன்றித்தான் தேர்தல் நடந்து வருகிறது. சிறிய பிரச்சினைகள்தான் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது போன்றவைத்தான் உள்ளது.
அவர்கள் புகாரில், வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டம் என்கிறார்களே?
கூடுதலாக பாதுக்காப்பு எப்படி என்றால், சாதாரணமாக 35 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பில் உள்ளனர். கூடுதலாக அதே அளவில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அதே அளவில் கூடுதலாக போலீஸார் சுமார் மொத்தமாக 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
இதுதவிர துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். ஆகவே எந்த இடத்திலும் எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. உங்கள் தொலைக்காட்சிகளிலும் அப்படி செய்தி வரவில்லை.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.