துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்து

துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்து
Updated on
1 min read

உதகை அருகே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தப்படவிருந்த பிரச்சார வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு உதகை வந்தார். உதகையில் உள்ள சுலைவன் கோர்ட் ஹோட்டலில் தங்கினார்.

இன்று (வியாழக்கிழமை) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் எம்.தியாகராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வந்தார்.

இந்நிலையில், ஓ.பி.எஸ். பயன்படுத்தும் பிரச்சார வாகனம் நடவட்டம் பகுதியில் வந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அச்சமயத்தில், பிரச்சார வாகனத்தில் ஓ.பன்னீர்செல்வம் இல்லை. மேலும், பிரச்சார வாகனத்தில் இருந்தவர்கள் காயங்களின்றி, அதிர்ஷ்டவசமாக உயிர தப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in