

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் பலமான வேட்பாளர்களான தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், பச்சமுத்து இந்த மூவரும் தங்கள் தொகுதிக்கு மட்டுமில்லாமல் கூடுதலாக இன்னும் சில தொகுதிகளுக்கும் சேர்த்து வரவு செலவுகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது அறிவாலயத்தின் அன்பான உத்தரவாம்.
இதேபோல் ஆளும் கட்சிக் கூட்டணியில், தஞ்சை, திருச்சி, சிவகங்கை தொகுதிகளுக்கான தேர்தல் செலவுகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்!