Published : 13 Apr 2019 07:18 AM
Last Updated : 13 Apr 2019 07:18 AM

வாக்கு வங்கி கட்சிகள்.. யார் பிரதமர் என்பதில் உறுதி; அதிமுக கூட்டணிக்கு அமோக வெற்றி நிச்சயம்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை

வாக்கு வங்கி உள்ள கட்சிகள் அனைத்தும் அதிமுக கூட்டணி யில்தான் இருக்கின்றன. எனவே, அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக இருக்கிறது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

அதிமுக தலைமையிலான உங்களது கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

தமிழகம் முழுவதும் பிரச்சா ரம் செய்து வருகிறேன். மக்கள் மத்தியில் எங்கள் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதி முகவில் இருந்து பிரிந்து அமமுக தனியாக தேர்தலை சந்தித்தாலும், அதை ஈடுசெய்யும் வகையில் தேமுதிக, பாமக, உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி யாக இணைந்து செயல்படுகி றோம். வாக்கு வங்கி உள்ள கட்சிகள் அனைத்தும் எங்கள் அணியில்தான் இருக்கின்றன. திமுக கூட்டணியில் திமுக தவிர மற்ற கட்சிகளுக்கு வாக்கு வங்கி இல்லை. அவர்களது அணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்ற குழப்பமும் நீடிக்கிறது. எங்கள் கூட்டணியில் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்பதை ஏற்றுக் கொண்டு பிரச்சாரம் செய்கிறோம். அமோக வெற்றி நிச்சயம்.

அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்த நீங்கள் தற்போது கூட்டணி வைத்துள்ளீர்களே?

அதிமுக ஆட்சியில் நடந்த தவறுகளை சுட்டிக் காட்டினோம். கூட்டணியில் இருப்பதால், எங்களது கொள்கைகளை விட்டு விட முடியாது. கூட்டணி என்பது வேறு. திமுகவை கடுமையாக விமர்சித்த வைகோ, திருமாவள வன் ஆகியோர் அந்த கூட்டணியில் தானே இருக்கின்றனர்.

கூட்டணிக் கட்சி தலைவர் களுடன் பொதுக்கூட்டங்களில் நீங்கள் பங்கேற்காதது ஏன்?

கூட்டணி இறுதியாவதற்கு முன்பே சென்னையில் பொதுக்கூட் டம் நடந்துவிட்டதால், கட்சித் தலைவர் விஜயகாந்த் பங்கேற்க இயலவில்லை. பிரச்சாரத்தில் தீவிரமாக இருப்பதால் நேரம் கிடைப்பதில்லை. தேனியில் பிரத மர் மோடி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் நானும் பங்கேற்கிறேன்.

கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவை கட்சித் தலைவர் விஜயகாந்தின் கவனத்துக்கு சென்றாலும், அவர் முடிவு எடுப்பதில்லை என்று கூறப்படுகிறதே.

வெளியில் இருப்பவர்கள் ஆயிரம் பேசலாம். தேமுதிகவை பொறுத்தவரை தலைவர் விஜய காந்த் எடுப்பதுதான் இறுதி முடிவு. இது எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர் களுக்கும் நன்கு தெரியும்.

தற்போது விஜயபிரபாகரனும் அரசியலில் இறங்கிவிட்டார். இது வாரிசு அரசியல் இல்லையா?

வாரிசு என்பதாலேயே ஒருவரை புறக்கணிக்க முடியாது. தேர்தலில் போட்டியிட்டு மக்கள் ஆதரவோடு வெற்றி பெறுபவர்களை யாரும் தடுக்க முடியாது.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தேர்தல் களம் குறித்து..

மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி இல்லாத இந்த தேர் தல், திமுகவுக்கு பெரிய சவா லாக இருக்கும். அதிமுகவில் ஆளுமைமிக்க தலைவர் ஜெய லலிதா இல்லாத நிலையில், முதல் வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மூத்த சகோதரர்களாக இருந்து, அதிமுகவை சிறப்பாக வழிநடத்திச் செல்கின்றனர்.

உங்கள் வாக்கு வங்கி சரிந்துள்ளதா?

தனித்துப் போட்டியிட்டபோது எங்கள் வாக்கு வங்கி தனித்து தெரிந்தது. கூட்டணி அமைத்து போட்டியிடும்போது மற்ற தொகுதிகளில் எங்கள் வாக்கு, கூட்டணி கட்சிக்கு செல்வதை கணக்கிடாதது ஏன்? தேமுதிக வாக்கு வங்கி சரியவில்லை. இத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் 4 தொகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

விஜயகாந்த் எப்போது பிரச்சாரம் தொடங்குகிறார்?

வெயில் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் அவரால் உடனடியாக பிரச்சாரம் மேற்கொள்ள முடியவில்லை. விரைவில் அவர் பிரச்சாரம் செய்வார். மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறோம். அவரது பிரச்சார தேதி குறித்து ஓரிரு நாளில் அறிவிப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x