

மனித உரிமைகள் அமைப்பு என்கிற பெயரை பயன்படுத்துவது, அதை வைத்து வசூல் செய்வது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தர்விட்டுள்ளது.
மனித உரிமைகள் அமைப்பு என்ற பெயரில் போலியான என் ஜி ஓக்கள், போலியான அமைப்புகள் அதிகரித்துள்ளன. போலி அமைப்புகள் பணம் பறிக்கும் செயலில் ஈடுப்படுவதாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதை, மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்த ஜான்சன் அப்பாதுரை என்பவர் அளித்த புகாரில் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி
மனித உரிமைகள் அமைப்பு என்ற பெயரை பயன்படுத்துவது குறித்தும், உறுப்பினர் சேர்க்கைக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் வசூலிப்பது குறித்தும் சிபிசிஐடி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.