

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தாங் கள் போட்டியிடும் தொகுதிகள் அல்லது வாரிசுகள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்வதால் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் அக்கட்சி களின் வேட்பாளர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 15 நாட்கள் இருப்ப தால் வேட்பாளர்களும், கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் முதல்வர் பழனி சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக கூட்டணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டா லின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி என தேர்தலில் போட்டி யிடாத தலைவர்கள் மட்டுமே தமிழ கம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம் பரம் தனது மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடும் சிவகங்கை தொகுதி யிலேயே முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இதுவரை அவர் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்குக்கூட செல்லவில்லை.
திருச்சியில் போட்டியிடும் முன்னாள் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர், தேனியில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் தங்களது தொகுதியை விட்டு எங்கும் செல்ல வில்லை. இதனால் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தனித்து விடப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகளை மட்டுமே நம்பியுள்ளனர்.
கன்னியாகுமரியில் போட்டியிடும் மத் திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தூத்துக்குடியில் போட்டி யிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சிவகங்கையில் போட்டி யிடும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரும் தங்கள் தொகுதியில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். இதனால் ராமநாதபுரம், கோவை பாஜக வேட்பாளர்கள் தனித்து பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திமுக பொருளாளர் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூரில் மட்டுமே தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால் சிறந்த பேச்சாளரான அவரது பிரச்சாரத்தை மற்ற திமுக வேட்பாளர்கள் பயன் படுத்திக் கொள்ள முடியவில்லை.
கட்சித் தலைவர்கள் அவர்களது தொகுதியிலேயே முடங்கிவிட்டதால் சொந்தக் கட்சி நிர்வாகிகளை ஒருங்கி ணைத்து தேர்தல் பணிகளை செய்ய முடியாமல் வேட்பாளர்கள் தவித்து வருகின்றனர்.
மற்ற நேரத்தில் தலைவர்களாக காட்டிக்கொள்பவர்கள் தேர்தல் வந்து விட்டால் தங்களது வெற்றி அல்லது வாரிசுகளின் வெற்றியில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர் என்று காங்கிரஸ், பாஜகவில் அதிருப்தி குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.