Published : 09 Apr 2019 10:40 AM
Last Updated : 09 Apr 2019 10:40 AM

மோடி வெளியிட்டுள்ளது வெற்று தேர்தல் அறிக்கை: நாகர்கோவிலில் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கை எதற் கும் பயன்படாத வெற்று அறிக்கை என நாகர்கோவிலில் நடந்த பிரச் சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமாரை ஆதரித்து நாகர்கோவில் நாகராஜா திடலில் நேற்று மாலை நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை. கன்னி யாகுமரியை உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக மாற்றுவதாக கூறிய மோடி, இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. இது போல் பொன் ராதாகிருஷ்ண னும் மக்களுக்கு அளித்த வாக்கு றுதிகளை நிறைவேற்றவில்லை.

கடலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலி காப்டர் தளம் அமைக்கப்படும். கன்னியாகுமரியில் ரயில்வே கோட்டம் அமைக்கப்படும். வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் அளிக்க வாக்குறுதி கள் எதையும் இதுவரை நிறை வேற்றவில்லை.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஏழைகளுக்கான உதவித்தொகை திட்டத்தை அனைத்து தரப்பினரும் வரவேற் றுள்ளனர். இத்தேர்தலில் காங்கி ரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகனாகத் திகழ்கிறது. மோடி வெளியிட்டுள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கை எதற்கும் பயன் படாத வெற்று அறிக்கை ஆகும்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்த உண்மைகள் அனைத் தும் வெளியே வரும். அவரது மரணத்துக்கு காரணமானவர் களை சிறையில் தள்ளுவது தான் எங்களது முதல் வேலை.

பொள்ளாச்சியில் 7 வருடமாக நடந்த பாலியல் வன்கொடுமை சம் பவத்தில் இதுவரை நடவடிக்கை இல்லை. ஆட்சி மாற்றம் நிகழ்ந் ததும் இந்த சம்பவத்தில் தொடர் புடைய அனைவர் மீதும் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்று தருவோம்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான திமுக கூட்டணி ஆட்சி அமைய வசந்தகுமாருக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x