Published : 04 Apr 2019 12:13 PM
Last Updated : 04 Apr 2019 12:13 PM

வேட்பாளருடன் பிரச்சாரத்துக்கு 2 பேர்; கண்காணிக்க 4 தேர்தல் அதிகாரிகள்: ம.நீ.ம. வேட்பாளர் பிரச்சாரத்தில் ருசிகரம்

நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் சின்னத்துரை, தனது கார் ஓட்டுநர், உதவியாளர் ஆகிய இருவருடன் கிராமம், கிராமமாக பிரச்சாரத்தை மேற்கொள்ள இவரை கண்காணிக்க தேர்தல் கண்காணிப்புகுழுவினர் நான்கு பேர் காரில் பின்தொ டர்கின்றனர்.

மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் டாக்டர் சின்னத்துரை நேற்று நிலக்கோட்டை தொ குதிக்குட்பட்ட நரியூத்து, பாலம்பட்டி, அவய ம்பட்டி, மைக்கேல்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தனது சொந்த காரில் ஓட்டு நர், உதவியாளர் ஒருவர் உடன் கிராமத்துக்கு செல்லும் வேட்பாளர் சின்னத்துரை ஊரின் மையப்பகுதிக்கு சென்றவுடன் காரில் இருந்து ஒரு ஸ்பீக்கர் உடன் மைக்செட்டை எடுத்து வைக்கிறார் அவரது உதவி யாளர். தொடர்ந்து பேசத் தொடங்குகிறார் வேட்பாளர்.

அந்த வழியே செல்பவர்கள் இவரை பார்த்தவுடன், நமக்கு ஊசிபோட்ட டாக்டராச்சே இவர், என்று இவரது அருகில் வந்து கேட்கின்றனர். அதற்கு வேட்பாளர், தான் மக்கள் நீதி மய்யம் சார்பில் நிலக்கோட்டையில் போட்டியிடுவதாக தெரிவித்து பேசுகிறார். ஊருக்கு வேட்பாளர் வருகிறார் என்பதற்காக, யாரும் எந்த முன்னேற்பாடும் செய்வதில்லை. மக்களையும் திரட்டுவதில்லை. வேட்பாளர் பேசியதாவது: கமல்ஹாசன் என்னை அழைத்து போட்டியிட வாய்ப்பு கொடுத்துவிட்டு தேவையில்லாமல் செலவு செய்யாதே என அறிவுரையும் வழங்கினார். இது எனது சொந்த கார், டீசல் செலவு எல்லாம் சேர்த்து மொத்த தேர்தல் செலவே ரூ. 1 லட்சத்துக்குள்தான் ஆகும். தேர்தலுக்கு பணம் செலவழிப்பதால் அரசியல் இன்று வியாபாரம் போல் ஆகிவிட்டது. சேவை நோக்கம் இல்லை என் றார். இந்த பிரச்சாரத்தையும் வேட்பாளரை கண்காணிக்க ஒரு காரில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர், உதவியாளர், போலீ ஸ்காரர் ஒருவர், வீடியோகிராபர் என நான்கு பேர் காரில் பின் தொடர்வதையும் கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x