

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஒரே திருநங்கை வேட்பாளர் எம்.ராதா.
தென் சென்னை தொகுதியில் `கம்யூட்டர் மவுஸ்' சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
அடையாறு பகுதியில் பிரச்சாரம் செய்த அவரை சந்தித்த போது கூறியதாவது:
மாற்றுப் பாலினத்தவர்களை மனிதர்களாகக் கூட ஏற்றகத் தயங் கிய நிலை இருந்தது. தற்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நாங்கள் பிரச்சாரத்துக்காக செல்லும்போது மக்கள் எங்களை அன்புடன் வரவேற்கிறார்கள். அரசியல் பற்றி எனக்கு அதிக படிப்பினை கிடையாது. ஆனால், பெண்கள், திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நடப்பது மனஉளைச்சலை ஏற்படுத்தியது. நல்ல அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டுமென மக்கள் நினைக் கிறார்கள். நாங்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களில் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள்.
வீடு, குடிநீர், சுகாதாரம், ரேஷன் கடை பிரச்சினை உள்ளிட்ட மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என்று வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்து வருகிறேன். நாங்கள் எதிபார்த்ததைவிட, மக்கள் எங்களை அன்போடு வரவேற் கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.