

வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் வட்டாட்சியர் சென்ற விவ காரத்தில் மதுரை ஆட்சியர், உதவி தேர்தல் அதிகாரி, ஆட்சியரின் நேர் முக உதவியாளர், காவல் உதவி ஆணையர் ஆகிய 4 பேரையும் உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘மதுரை மக்களவைத் தொகுதி யில் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத் துவக் கல்லூரிக்குள், பாதுகாப்பு வளையத்தையும் மீறி சம்பூர்ணம் என்ற பெண் வட்டாட்சியர் சென்று ஆவணங்களை நகல் எடுத்துள் ளார். எனவே, பாதுகாப்பு குளறு படிக்கு காரணமான மாவட்ட ஆட்சி யரை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை மக்கள வைத் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது நடந்த வாதம்:
மனுதாரரின் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ: கடும் பாது காப்பு வளையத்தையும் மீறி, வாக்கு இயந்திரங்கள் இருக்கும் மையத்துக்குள் சிலர் சர்வசாதாரண மாக புகுந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இவ் வளவு நடந்தும், தேர்தல் அதிகாரி யான மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்கு சென்று, என்ன நடந்தது என்று கூட ஆய்வு செய்யவில்லை. தற்போது வட்டாட்சியரை மட்டும் இடைநீக்கம் செய்துள்ளனர்.
தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன்: மாவட்ட ஆட்சியரின் உதவியாளரான உதவி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில்தான், வாக்கு எண்ணும் மையத்துக்குள் வட்டாட்சியர் சம்பூர்ணத்துடன், மாநகராட்சி ஊழியர்களான பி.சூர்யபிரகாஷ், பி.ராஜபிரகாஷ், கலால் துறை ஊழி யர் என்.சிவராமன் ஆகிய 3 பேர் உடன் சென்றுள்ளனர். சம்பூர்ண மும் தேர்தல் அலுவலர்தான். ஆனா லும் அத்துமீறி சென்றது குற்றம் தான். அதற்காகவே தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி நடத்திய விசாரணையில், அங்கு பாதுகாப்பு குளறுபடிகள், குறைபாடுகள் கண்டறியப்பட்டுள் ளது. இதுகுறித்து தேர்தல் ஆணை யம் விசாரணை நடத்தி வருகிறது. (இவ்வாறு கூறி அறிக்கையை தாக்கல் செய்தார். அதை நீதிபதி கள் படித்துப் பார்த்தனர்.)
நீதிபதிகள்: இந்த அறிக்கையில் யார் மீதும் எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. யார் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்பதும் இல்லை. உதவி தேர்தல் அதிகாரி உத்தரவுப்படியே வட்டாட் சியர் சென்றார் என்றால், அவரிடம் கூட விசாரணை நடத்தப்பட வில்லை. வாக்கு எண்ணும் மையத் தில் தினமும் முறையாக ஆய்வு நடத்தாத ஆட்சியர் மீது தலைமை தேர்தல் அதிகாரி இதுவரை நட வடிக்கை எடுக்காதது ஏன், பெண் அதிகாரியை உள்ளே செல்ல போலீஸார் எப்படி அனுமதித்தனர்?
தேர்தல் ஆணைய வழக் கறிஞர்: தலைமை தேர்தல் அதிகா ரிக்கு என தனியாக அதிகாரம் கிடை யாது. அவர் தபால்காரர் போலத் தான். இந்திய தேர்தல் ஆணை யம் பிறப்பிக்கும் உத்தரவை, சக அதிகாரிகளுக்கு கொண்டு செல்வார்.
நீதிபதிகள்: எந்த அதிகாரமும் இல்லாத ஒரு அதிகாரிதான் மக்கள வைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலை நடத்துகிறாரா?
இவ்வாறு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு மீதான உத்தரவை தள்ளிவைத்தனர்.
பாதுகாப்பு குளறுபடி
பின்னர் இரவு 7 மணி அளவில் இடைக்கால உத்தரவை பிறப்பித்த னர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பாதுகாப்பு குளறுபடி இருப்ப தாகவே உணர முடிகிறது. இந்த சம்பவத்துக்கு மூல காரணமாக ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இருந்துள்ளார்.
எனவே, இதற்கு காரணமான தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன், மதுரை மேற்கு தொகுதி உதவி தேர்தல் அதிகாரி குரு சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன் மற்றும் குற்றப்பிரிவு காவல் உதவி ஆணை யர் மோகன்தாஸ் ஆகிய 4 பேரையும் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் குற்றவியல் அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.
புதிய ஆட்சியர் நியமனம்
இதையடுத்து, ‘மதுரை ஆட்சி யர் உள்ளிட்டோர் உடனடி யாக இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். மதுரை ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரியாக எஸ்.நாகராஜனையும், மேற்கு தொகுதி உதவி தேர்தல் அதிகாரியாக எஸ்.சாந்தகுமாரையும் நியமிக்கிறோம்’ என்று கூறி நீதிபதிகளிடம் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.