சமூக நல்லிணக்கத்திற்கு திருமாவளவன் மிகப்பெரிய அச்சுறுத்தல்: எச்.ராஜா சாடல்

சமூக நல்லிணக்கத்திற்கு திருமாவளவன் மிகப்பெரிய அச்சுறுத்தல்: எச்.ராஜா சாடல்
Updated on
1 min read

சமூக நல்லிணக்கத்திற்கு திருமாவளவன் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார்.

பொன்பரப்பியில் தலித்துகள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து சென்னையில் ஏப்ரல் 24-ம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

தன்னுடைய பேச்சில் பாமக, பாஜக ஆகிய கட்சிகளையும், ஆர்.எஸ்.எஸ்ஸையும் கடுமையாக தாக்கிப் பேசினார். இந்தப் பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எச்.ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சரக்கு மிடுக்கு பேச்சிற்கு சொந்தக்காரரான திருமாவளவன் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பற்றி பேசியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு இவர் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆவார். சிதம்பரம் தொகுதியில் ஏற்பட்டுள்ள தோல்வி பயத்தால் சமூகப் பதட்டத்தை ஏற்படுத்துகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in