Published : 29 Apr 2019 09:19 AM
Last Updated : 29 Apr 2019 09:19 AM

துரோகிகளும், எதிரிகளும் தேர்தலில் வெற்றி பெற முடியாது: தூத்துக்குடியில் 7 அமைச்சர்கள் ஆவேசம்

துரோகிகளும், எதிரிகளும் தேர்த லில் வெற்றி பெற முடியாது. ஸ்டாலின், தினகரன் கபட நாடகம் மக்களிடம் எடுபடாது என, தூத்துக்குடியில் அமைச்சர்கள் ஆவேசமாக கூறினர்.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் பி.மோகன் போட்டியிடு கிறார். அவரை ஆதரித்து செயல் வீரர்கள் கூட்டம் தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் நடைபெற்றது.

அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் செ.ராஜு, காமராஜ், விஜயபாஸ்கர், மணிகண் டன், ராஜலெட்சுமி, சேவூர் ராமச் சந்திரன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாநிலங்களவை உறுப்பினர்கள் விஜிலா சத்தியானந்த், முத்துக் கருப்பன் மற்றும் எஸ்.பி.சண்முக நாதன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் 7 அமைச்சர் களும் கூட்டாக செய்தியாளர்களி டம் கூறியதாவது: ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட இடைத்தேர்தல் நடை பெறும் 4 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும். ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒருமுறை மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது. அதுவும் 1989-ல் அதிமுக பிளவுபட்ட நிலையில் தான் திமுக வெற்றி பெற முடிந்தது. அப்போது இரட்டை இலை சின்னம் இல்லை. இப்போது இரட்டை இலை எங்களோடு உள்ளது.

இடைத்தேர்தலில் எதிரிகளும், துரோகிகளும் வெற்றிபெற முடியாது. தமிழக உரிமையை முதல்வர் பழனிசாமி ஒரு போதும் விட்டுத்தரமாட்டார். வரம்பு மீறி செயல்படக்கூடிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் மீது கட்சி கட்டுப்பாட்டை காக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின் றன. இந்த நடவடிக்கை தேர்தல் சமயத்துக்காக எடுக்கப்பட்டதல்ல என்றனர்.

முன்னதாக கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள், “தமிழக மக்கள் மனதில் ஸ்டாலின் மற்றும் தினகர னுக்கு இடமில்லை. அவர்கள் போடு வது தப்பு தாளம். தமிழக முதல்வர் அடிப்பது ராஜமேளம். அது தான் எடுபடும். தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் மூன்று சட்டப் பேரவை உறுப்பினர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு ஸ்டாலின் வக்காலத்து வாங்கு வதன் மூலம் அவர்களுக்கு இடை யேயான உறவு வெளிப்பட்டுள்ளது” என்றனர். தூத்துக்குடி தேவர்புரம் சாலையில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x