

தமிழக தேர்தல் பிரிவு டிஜிபி யாக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருப்பவர் டி.கே.ராஜேந்திரன். தேர்தல் நடை பெறும் காலங்களில் மட்டும் தேர்தல் பணிகளுக்கென்று தனியாக ஒரு டிஜிபியை தேர்தல் ஆணையம் நியமிக் கும். தமிழகத்தில் வருகிற 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து தமிழக தேர்தல் பிரிவு டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சிறைத் துறை டிஜிபியாக அசுதோஷ் சுக்லா இருக்கிறார். இவர் தற்போது தேர்தல்பிரிவு டிஜிபி அறிவிக்கப்பட் டுள்ளதால், டிஜிபி அலு வலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை இனி மேல் முழுமையாக செயல் பட தொடங்கும். தேர்தல் தொடர்பான வழக்கு, பாது காப்பு உட்பட அனைத்து பிரச்சினைகளையும் தேர்தல்பிரிவு டிஜிபியே கையாளு வார். மே 23-ம் தேதி வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இவரது கட்டுப்பாட் டிலேயே தேர்தல் பணிகள் நடைபெறும். 2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, இவரை சென்னை மாநகர காவல் ஆணையராக தேர்தல் ஆணை
யம் நியமித்தது குறிப்பிடத் தக்கது.