

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் எந்த அளவிற்கு தேர்ச்சி விகிதம் இருந்துள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.