Published : 11 Apr 2019 11:42 AM
Last Updated : 11 Apr 2019 11:42 AM

தேனி தொகுதியில் யார் பணக்கார வேட்பாளர்? ஓபிஎஸ் மகனா அல்லது தங்க தமிழ்ச்செல்வனா?

தேனியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன் விவரம்:

ஒ.பி.எஸ்.ரவீந்திரநாத் குமார், அதிமுக

ரவீந்திரநாத் பெயரில், அசையும் சொத்துகளின் மதிப்பீடு 4 கோடியே 16 லட்சத்து 27,224 ரூபாயாகவும், மனைவியின் சொத்து மதிப்பீடு 31 லட்சத்து 58,506 ரூபாயாகவும், மகன்களின் சொத்து மதிப்பு 8 லட்சத்து 83,131 ரூபாயாகவும், மகளின் சொத்து மதிப்பு 10 லட்சத்து 61,067 ரூபாயாகவும் உள்ளது.

ரவீந்திரநாத் பெயரில் அசையா சொத்து மதிப்பீடு 1 கோடியே 90 லட்சத்து 73,303 ரூபாயாக உள்ளது.

ரவீந்திரநாத் பெயரில், 3 கோடியே 27 லட்சத்து 34,079 ரூபாய் கடன் உள்ளது.

தங்க தமிழ்ச்செல்வன், அமமுக:

தங்க தமிழ்ச்செல்வன் பெயரில், அசையும் சொத்து மதிப்பீடு 72 லட்சத்து 86,388 ரூபாயாகவும், மனைவியின் சொத்து மதிப்பீடு 43 லட்சத்து 17, 393 ரூபாயாகவும், மகனின் சொத்து மதிப்பு 8 லட்சத்து 36, 789 ரூபாயாகவும், மகளின் சொத்து மதிப்பு 9 லட்சத்து 20,239 ரூபாயாகவும் உள்ளது.

தங்க தமிழ்ச்செல்வன் பெயரில் அசையா சொத்துக்களின் மதிப்பீடு 64 லட்சத்து 60,030 ரூபாயாகவும், மனைவியின் சொத்து மதிப்பீடு 1 கோடியே 66 லட்சத்து 59, 675 ரூபாயாகவும் உள்ளது.

தங்க தமிழ்ச்செல்வன் பெயரில் 79 லட்சத்து 34, 188 ரூபாய் கடனும் மனைவியின் பெயரில் 26 லட்சத்து 43,179 ரூபாய் கடனும் உள்ளது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ்:

இளங்கோவன் பெயரில் உள்ள அசையும் சொத்து மதிப்பீடு 2 கோடியே 33 லட்சத்து 26,360 ரூபாயாகவும், மனைவியின் சொத்து மதிப்பு 39 லட்சத்து 49,613 ரூபாயாகவும், குடும்ப சொத்து மதிப்பீடு 21 லட்சத்து 65,294 ரூபாயாகவும் உள்ளது.

இளங்கோவன் பெயரில், அசையா சொத்து மதிப்பீடு 13 கோடியே 25 லட்சம் ரூபாயாகவும், மனைவியின் சொத்து மதிப்பீடு 4 கோடியே 13 லட்சமாகவும், குடும்ப சொத்து 3 கோடியே 30 லட்சமாகவும் உள்ளது.

மனைவியின் பெயரில் 22 லட்சம் கடனும், குடும்ப பெயரில் 52 லட்சத்து 50,651 ரூபாய் கடனும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x