

உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) மற்றும் காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு சென்னையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைவில் தமிழக காவல்துறையில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை உள்ளிட்ட 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தேர்வு நடைபெற உள்ளது.
இத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் www.tnusrbonline.org என்னும் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலமாக மட்டும் ஏப்ரல் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுதவிர இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத்துறையில் உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. மொத்த பணியிடங்கள் 8826.
இதில் கலந்துகொள்ளும் ஆண்கள் பெண்களுக்கு வழிகாட்டவும், தேர்வுக்கான இலவசப் பயிற்சியையும் சென்னை அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து எஸ்.ஐ. பணியிடங்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பை நடத்த உள்ளது.
இதுகுறித்து அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் கூறியுள்ளதாவது:
''அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறது.
தற்போது தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எஸ்.ஐ. தேர்விற்கான பயிற்சி வகுப்பு வருகின்ற 14.4.2019 - ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பாரிமுனை அரண்மனைக்காரன் தெரு, NO. 6, கச்சாலீஷ்வரர் கோயில் லைன் என்ற முகவரியில் தொடங்கும்.
பயிற்சியின் போது மாணவர்களுக்கு பாடத்திட்டத்துடன் உடல் திறன் மற்றும் மனநலம் பற்றிய ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், மோகன் - 98847 47217, பாலாஜி - 93449 51475 வாசுதேவன் 94446 41712 என்கிற எண்களில் தொடர்பு கொண்டு பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.
வகுப்பிற்கு வரும் மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பித்தின் Xerox copy-யை கட்டாயம் உடன் கொண்டுவரவும்''.
இவ்வாறு ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.