Published : 16 Apr 2019 12:00 AM
Last Updated : 16 Apr 2019 12:00 AM

கள்ளழகரை வரவேற்க தயாராகும் பக்தர்கள்: புதுமண்டபத்தில் கள்ளழகர் ஆடைகள் தயாரிப்பு மும்முரம்

சித்திரைத் திருவிழாவில் வரும் 19-ம் தேதி வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை வரவேற்க மதுரை மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக புதுமண்டபத்தில் பக்தர்கள் அணியும் சாமியாட்டம் கள்ளழகர் ஆடைகள் தயாரிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. மதுரை சித்திரைத் திருவி ழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிக முக்கியமானது. அப்போது லட்சக்க ணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசிக்கத் திரளுவார்கள். தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை.

அதனால், சித்திரைத் திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த ஆண்டு கள்ளழகர் வரும் 19-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார். இதற்காக 17-ம் தேதி மாலை அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்படுகிறார். 18-ம் தேதி காலை 6 மணிக்கு மூன்றுமாவடியில் கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும். இதில் மக்கள், வழிநெடுக மண்டகப் படிகளில் நின்று சுவாமி தரிசனம் செய்வார்கள்.

அன்னதானம், நீர் மோர் பந்தல் என்று மதுரை நகரமே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். 19-ம் தேதி அதிகாலை கள்ளழகர் ‘வாராரு வாராரு…அழகர் வாராரு, ’ என்ற பக்தி கோஷத்துடன் வைகை ஆற்றில் இறங்குகிறார். கள்ளழகரை பக்தர்கள் வைகை ஆற்றிலும், கரையிலும் நின்று குழந்தைகள், இளைஞர்கள்கள் ளழகர் போல் வேடமணிந்தும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், வர வேற்பார்கள். 

அழகர் வேடம் அணியும் பக்தர்களுக்காக சல்லடம் ஆடை கள், தண்ணீர் பீய்ச்சியடிக்கும் பைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை புதுமண்டபத்தில் தீவிரமாக நடக்கிறது. இதுகுறித்து தையல் கலைஞர் கார்த்திகேயன் கூறியதாவது:அழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றப்பட்டதும் பக்தர்கள் விரதம் இருந்து, புதுமண்டபத்துக்கு கள்ளகழகர் ஆடைகள், சாமியாட்டம் சல் லடம் ஆடைகள், தண்ணீர் பீய்ச்சியடிக்கும் பைகள் வாங்க வருவார்கள். மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து சம்பவத்தால் கடந்த ஆண்டு 6 மாதங்கள் கடையை அடைத்துவிட்டார்கள்.

அது சித்திரைத் திருவிழா வரை நீடித்ததால் திருவிழா வியாபாரம் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கடைகளை திறந்ததால் வியாபாரம் சிறப் பாக உள்ளது. கள்ளழகர் ட்ரவுசர், பேண்ட், குல்லா, சல்லடம் ஆடைகளை பக்தர்கள் வாங்கிச் செல்கின்றனர். இந்த ஆண்டு குழந்தைகளுக்கான கள்ளழகர் ஆடைகள் அதிகம் விற்பனையாகின்றன.

புதுமண்டபத்தில் தயாரிக்கப்படும் கள்ள ழகர் ஆடைகள் விசேஷமானது. பல தலைமுறையாக இங்கு கலை ஞர்கள் பக்தியுடன் கள்ளழகர் ஆடைகளை தயாரிக்கின்றனர். அதனால், ஆண்டுதோறும் பக்தர்கள் இங்கு ஆடைகள் வாங்குவதைச் சம்பிரதாயமாக கடைப்பிடிப்பதால் நாங்கள் கடை வீதிகளுக்குச் சென்று விற்பதில் லை. தேடி வந்து வாங்கிச் செல்வார்கள். விழாவுக்கு ஓரிரு நாட்களே உள்ளதால் வியாபாரம் மேலும் சூடுபிடிக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x