

தமிழகம் முழுதும் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. மத்திய சென்னை, தென் சென்னை, கன்னியாகுமரியில் மந்தமான வாக்குப்பதிவாக உள்ளது.
17 வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வேலூர் தொகுதி தவிர 38 தொகுதிகளில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு வேகமாக நடந்து வருகிறது. பெரிய அளவில் அசம்பாவிதம் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக உள்ளது.
வாக்குப்பதிவு விபரங்களை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிடுகிறது. காலை 9 மணிக்கு 13 சதவீதமும், காலை 11 மணிக்கு 30.6 சதவீதமும் பதிவாகி இருந்தது. மதியம் 1 மணி நிலவரத்தில் கூடுதல் வேகமில்லை. ஒருவேளை உச்சிவெயில் காரணமாக இருக்கலாம்.
வாக்குப்பதிவு சதவீதம் மாவட்ட வாரியாக
1. திருவள்ளூர் 40.6
2. வடசென்னை 37.23
3. தென்சென்னை 37.9
4. மத்திய சென்னை 36.09
5. ஸ்ரீபெரும்புதூர் 39.1
6. காஞ்சிபுரம் 38.4
7. அரக்கோணம் 40.5
8. கிருஷ்ணகிரி 39.96
9. தர்மபுரி 39.8
10. திருவண்ணாமலை 39.3
11. ஆரணி 39.1
12. விழுப்புரம் 40.1
13. கள்ளக்குறிச்சி 41.6
14. சேலம் 40.3
15. நாமக்கல் 41.5
16. கோவை 39.9
17. ஈரோடு 41.5
18. திருப்பூர் 40.8
19. நீலகிரி 39.3
20. பொள்ளாச்சி 40
21. திண்டுக்கல் 39.3
22. கரூர் 40.6
23. திருச்சி 40.2
24. பெரம்பலூர் 39.8
25. கடலூர் 39.1
26. சிதம்பரம் 39.6
27. மயிலாடுதுறை 38.9
28. நாகப்பட்டினம் 40.3
29. தஞ்சாவூர் 39.1
30. சிவகங்கை 39.8
31. மதுரை 37.4
32. தேனி 38.7
33. விருதுநகர் 39.2
34. ராமநாதபுரம் 38.9
35. தூத்துக்குடி 38.9
36. தென்காசி 40
37. திருநெல்வேலி 39.9
38. கன்னியாகுமரியில் 37.2
தமிழகம் முழுதும் மொத்த வாக்குப்பதிவு: 39.49 சதவீதம்
குறைந்த அளவு வாக்குப்பதிவு: மத்திய சென்னை 36.09, அதிக அளவு வாக்குப்பதிவு : நாமக்கல் 41.56
மேற்கண்ட தகவலை தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.