Last Updated : 28 Apr, 2019 05:05 PM

 

Published : 28 Apr 2019 05:05 PM
Last Updated : 28 Apr 2019 05:05 PM

கண்ணீர் விட்டு அழுத விவசாயி: எஜமானரைக் காப்பாற்ற பாம்புடன் போராடி உயிர்விட்ட நாய்க்குட்டி

தன் எஜமானரைக் காப்பாற்ற மிகவும் நச்சுத்தன்மையுள்ள பாம்புடன் நாய்க்குட்டி ஒன்று போராடி உயிர்விட்ட சம்பவம் தஞ்சையில் நேற்று நடந்துள்ளது. இந்நாய்க்குட்டியை புதைப்பதற்குமுன் அதை சேர்த்தணைத்து விவசாயி அழுத சம்பவம் அனைவரையும் நெக்குருக வைத்தது.

நடராஜன் (50),  இவர் தஞ்சைக்கு அருகிலுள்ள வெங்கராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. அவர் நேற்று வழக்கம்போல தனது வயல்வெளிக்கு சென்றுகொண்டிருந்தார். அவர் சென்ற வழியில் திடீரென ஒரு ஐந்தடி நீளமுள்ள நாகப்பாம்பு எதிரே வந்தது. அவரைத் தாக்கும்விதமாக படம்எடுத்தது. இதனைப் பார்த்த இவரது நாய்க்குட்டி தனது எஜமானரைக் காப்பாற்ற பாம்பிடம் பாய்ந்தது. அதனுடன் சண்டையிட்டது.

இதற்கிடையில் பாம்பை அடித்துவிரட்டுவதற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் நாய்க்குட்டியை மீட்கவும் ஒரு கம்பு ஒன்றைத் தேடி எடுத்துவர அருகிலுள்ள தனது வீட்டிற்கு நடராஜன் சென்றார்.

ஆனால், அவர் திரும்பி வரும்போதெல்லாம் நாய்க்குட்டி சோகமாக இறந்துகிடந்ததாக விவசாயி தெரிவித்தார்.

விஷப்பாம்புடன் போராடி நாய்க்குட்டி உயிரிழந்த செய்தி பரவிய சிறிது நேரத்திற்கெல்லாம் அருகில் வசித்துவந்த உள்ளூர் மக்கள் திரண்டனர். தன் எஜமானருக்காக தன் உயிரை விட்ட  நாய்க்குட்டிக்காக அஞ்சலி செலுத்தினர்.

அவரது வீட்டிற்கு அருகிலேயே புதைப்பதற்காக எடுத்துச்சென்றபோது, மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்த விவசாயி நடராஜன், நாய்க்குட்டியை வாங்கி தன் நெஞ்சோடு சேர்த்தணைத்துக்கொண்டு அழுததாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

விவசாயியின் விசுவாசமான நாய்க்குட்டியின் உயிரிழப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x