

மத்திய அரசில் 15 ஆண்டுகளாக அங்கம் வகித்த திமுக தமிழகத் துக்கு எந்தவொரு நல்ல திட்டத் தையும் கொண்டுவரவில்லை என முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.
திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டியில் நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தாழை சரவணன், மன்னார்குடியில் தஞ்சை மக்களவைத் தொகுதி தமாகா வேட்பாளர் என்.ஆர்.நட ராஜன் ஆகியோரை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, மன்னார்குடியில் அவர் பேசியதாவது: அதிமுக தேர் தல் அறிக்கையில் நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளையே மக் களுக்கு அளித்து இருக்கிறோம். ஆனால், திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து இருக் கிறது. 15 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக தமிழ கத்துக்கு நன்மை செய்யக் கூடிய எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற வில்லை. தமிழக அரசின் நிர்வாகத் திறன் காரணமாக தமிழகம் இன்று மின்மிகை மாநிலமாக செயல்பட்டு வருகிறது.
நான் ஒரு மண்புழு என ஸ்டா லின் விமர்சித்துள்ளார். மண்புழு தான் விவசாயிகளின் நண்பன். அதன்படி, நானும் விவசாயிகளின் நண்பன். ஆனால், ஸ்டாலின் பயிரைத் தாக்கும் வைரஸ் கிருமி. எனவே, வைரஸ் கிருமியை விவசாயிகள் அகற்ற வேண்டும்.
தமிழகத்தில் புதிதாக 76 அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப் பட்டுள்ளன. ஜெயலலிதா ஆட்சி யில் இருந்தபோது 100-க்கு 21 பேர் உயர்கல்வி படித்தனர். தற்போது 100-க்கு 47 பேர் உயர்கல்வி படிக்கின்றனர். மற்ற மாநிலங்களை விட இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான் என ‘இந்தியா டுடே’ விருது வழங்கியுள்ளது என்றார்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடைத்தெரு, நாகை அவுரித்திடல் ஆகிய இடங்களில் நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை சரவணனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
சாதாரண விவசாய குடும் பத்தைச் சேர்ந்த நான் படிப் படியாக முன்னேறித்தான் இன் றைக்கு முதல்வராகி இருக்கி றேன். எனக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று திட்ட மிட்டு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை 35 ஆயி ரம் போராட்டங்களை சந்தித்துவிட் டேன் என்றார்.