

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி நடக்கவுள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பா.ஜோதி நிர்மலா வெளியி்ட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகள், 8 நகராட்சிகள் மற்றும் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 18-ம் தேதி நடக்கவுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்களின் பயன் பாட்டுக்கென 605 ரகசிய முத்திரை கள், 11,829 அழியா மை குப்பிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களுக்கான நீல நிறத்தாள் முத்திரைகள், ஓட்டுத்தாள் முத்திரைகள் ஆகியவை அனைத்து மாவட்டங்களுக்கும் செவ்வாய்க்கிழமை வழங்கப் பட்டன. உள்ளாட்சி அமைப்பு களுக்கான இடைத்தேர்தலை சிறப்பாக நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர், அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்
இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. சென்னை மாநகராட்சியில் 35 (வியாசர்பாடி) மற்றும் 166 (பழவந்தாங்கல்) ஆகிய வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. உயர் நீதிமன்றத்தால் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, சென்னையில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்றே கருதி உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள சென்னை மாநக ராட்சி ஆணையருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் ஏற்கெனவே பதற்றமானவையாக கண்டறியப் பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் தற்போது இடைத்தேர்தல் நடக்கும்பட்சத்தில் அங்கு வீடியோ பதிவு உள்ளிட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலின்போது பின்பற்றப்பட வேண்டிய நடை முறைகள் மற்றும் வழிகாட்டுதல் களை தவறாது பின்பற்ற வேண் டும் என மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணைய ருக்கு கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.