ஹாட்லீக்ஸ் : 2 நாள் 32 கூட்டம்’ - இது வீரமணி ரூட்!

ஹாட்லீக்ஸ் : 2 நாள் 32 கூட்டம்’ - இது வீரமணி ரூட்!
Updated on
1 min read

 22 நாட்களில் 32 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் திக தலைவர் கி.வீரமணி.

இதுவரை நடந்த 17 மக்களவைத் தேர்தல்களிலும் பிரச்சாரம் செய்திருக்கும் வீரமணி, இப்போது 86 வயதான போதும் தமிழகம் முழுமைக்கும் 5,157 கிலோ மீட்டர் தூரம் சாலை வழியாகவே தனது பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார். “இந்தத் தேர்தலில் இப்படியொரு பயணத்தை மேற்கொண்ட மூத்த தலைவர் யாருமே இருக்க மாட்டார்கள்” என்று சொல்லி பெருமைப்படும் கருஞ்சட்டைக்காரர்கள், “பல இடங்கள்ல மக்கள், தலைவரின் கையைப் பிடிச்சு முத்தமிட்டு, ‘கலைஞர் இல்லாத குறைய போக்கிட்டீங்க. உங்கள பார்க்கையில கலைஞர பார்த்தாப்ல இருக்கு’னு சொல்லி நெகிழ வெச்சுட்டாங்க” என்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in