Published : 19 Apr 2019 10:02 AM
Last Updated : 19 Apr 2019 10:02 AM
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுத பதிவு செய்தோர் மொத்த எண்ணிக்கை: 8,69,423.
*தேர்வு எழுதியோர் மொத்த எண்ணிக்கை: 8,42,512.
* மாணவியர் எண்ணிக்கை 4,53,262.
* மாணவர்கள் எண்ணிக்கை 3,89,250.
* பொதுப் பாடப்பிரிவில் தேர்வெழுதியோர் எண்ணிக்கை 7,87,577.
* தொழிற்பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 54,935.
தேர்ச்சி விவரங்கள்
* தேர்ச்சி பெற்றவர்கள் மொத்தம் 91.3 சதவீதம்
* மாணவியர் 93.64 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
* மாணவர்கள் 88.57ரூ தேர்ச்சி அடைந்துள்ளனர்.
* மாணவர்களைவிட மாணவியர் 5.07 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!