Last Updated : 02 Apr, 2019 12:00 AM

 

Published : 02 Apr 2019 12:00 AM
Last Updated : 02 Apr 2019 12:00 AM

தேனி மக்களவையில் தொகுதியில் மாறும் வேட்பாளர்.. மாறாத வாக்குறுதிகள்..: வேதனையில் குமுறும் மக்கள்

தேனி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தேர்தல்களின்போது மட்டும் வாக்குறுதிக்காக பரபரப்பாக பேசப்படுவதும், பின்னர் மறந்துவிடுவதுமான நிலை தொடர்கிறது. திண்டுக்கல்-குமுளி அகலரயில் பாதைத் திட்டம் பல ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தியும் இதுவரை இத்திட்டம் ஆய்வு நிலையிலேயே இருக்கிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் தேனி மாவட்டத்தின் ஓரப் பகுதியில் இருந்தும் நேரடியாக பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு நேரடியாக ரயிலில் பயணிக்கலாம்.

தேவாரத்தில் இருந்து கேரளாவின் சாக்குலூத்து மெட்டு வழியாக இணைப்புச் சாலை: இதன் மூலம் 16 கிமீ தூரத்தில் உலுப்பஞ்சோலை, நெடுங்கண்டம் உள்ளிட்ட பகுதிகளை அடையலாம். ஆனால் தற்போது 70 கிமீ. சுற்றுப் பாதையில் கம்பம் மெட்டு, போடிமெட்டு வழியே பயணிக்க வேண்டியுள்ளது. எம்ஜிஆர். காலத்தில் 1981-ல் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதைய நெடுஞ்சாலை, உள்ளாட்சித்துறை அமைச்சர் குழந்தைவேலு இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டார். ஆனால், வனத்துறை முட்டுக்கட்டையாலும், அரசியல்வாதிகளின் முயற்சி இன்மையாலும் இத்திட்டம் செயல்வடிவம் பெறாமல் உள்ளது. பருவமழை முன்பு போல் இல்லைஅதேபோல, பழத் தொழிற்சாலை திட்டமும் கிடப்பில் உள்ளது. கம்பம் பள்ளத் தாக்கு, ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திராட்சையும், பெரியகுளம், போடி பகுதிகளில் மாம்பழ விளைச்சலும் அதிகம் உள்ளன. விலையில்லாத நேரங் களில் இருப்பு வைக்கவும், மதிப்பு கூட்டப் பட்ட பொருளாக இவற்றை உருமாற்றவும் குளிர்ப்பதன வசதியுடன் கூடிய தொழிற் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்தாலும் செயல்வடிவம் பெறவே இல்லை. தேனியில் முன்புபோல, பருவ மழை அதிகம் பெய்வதில்லை. ஏராளமான மரங்கள் அழிக்கப்பட்டதே இதற்குக் காரணம். இவற்றை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு தற்போது செயலிழந்துள்ளது.

மதுரை-போடி அகல ரயில் பாதையாக மாற்றவும், நீட்டிக்கவும் பல ஆண்டுகளாக குரல் கொடுக்கப்பட்டது. தற்போது அகலப்பாதை அமைப்பதற்காக நிறுத்தப்பட்ட ரயில் இதுவரை இயங்கவில்லை.

இதே போல், பெரியாறு அணை நீர்மட்டத்தை 152-க்கு உயர்த்துதல், வைகை,சோத்துப்பாறை அணைகளை தூர்வாருதல், கும்பக்கரை-அடுக்கம் சாலை உள்ளிட்ட நிறைவேற்றாத திட்டங்கள் அதிகளவில் உள்ளன. நேர விரயம் குறையும்இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மண்டலச் செயலாளர் திருப்பதிவாசகன் கூறியதாவது: சாக்குலூத்து மெட்டுச் சாலை இரு மாநிலங்களுக்கு இடையே பயண நேரத்தை குறைக்கும் திட்டம் தினமும் 300க்கும் மேற்பட்ட ஜீப்கள் சுற்றுப் பாதையில் சென்று வருகின்றன. இதனால் நேர விரயமும், செலவும் அதிகம். இந்த சாலை வந்தால் அரைமணி நேரத்தில் ரூ. 15 செலவில் கேரளாவுக்கு சென்று விடலாம்.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு ஆம்னிப் பேருந்துகளில் கட்டணம் மிக அதிகம். திண்டுக்கல் ரயில் பாதை மூலம் கட்டணச் செலவு குறையும்.

இத்தொகுதியில் நிறைவேற்றப்படாமல் உள்ள பல்வேறு திட்டங்கள் மத்திய அரசு தொடர்புடையது. இத்தொகுதியில் வெற்றி பெறும் எம்பி. முனைப்பு காட்டினால் மாம்பழக் கூழ் தொழிற்சாலை, ரயில்பாதை உள்ளிட்ட திட்டங்கள் செயல்வடிவம் பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த தேர்தலில் வெற்றிபெறும் வேட்பா ளராவது கிடப்பில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவாரா என்பதே தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x