

விஜயதசமி விழாவை முன்னிட்டு கச்சேகவுடா சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்றுமுதல் (30-9-14) தொடங்குகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக கச்சேகவுடா சென்னை சென்ட்ரல் (எண்: 02760) சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் கச்சேகவுடாவில் இருந்து அக்டோபர் 5-ம் தேதி இரவு 11 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பகல் 12 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னை சென்ட்ரல் கச்சேகவுடா சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 02759) சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 6-ம் தேதி பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 3.40 மணிக்கு கச்சேகவுடா போய்ச்சேரும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்றுமுதல் (செப். 30) தொடங்குகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.