

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், மொத்தம் 6100 பள்ளிகள் இந்த தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. 95.2 சதவீதம் மாணவ - மாணவியர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்கள்
1. திருப்பூர் 98.53 சதவீதம்
2. இராமநாதபுரம் 98.48 சதவீதம்
3. நாமக்கல் 98.45 சதவீதம்
100 சதவீதம் தேர்ச்சி:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,548. இவற்றில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,286. உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5,262. 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 6100.
பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்
1. அரசுப் பள்ளிகள் 92.48 சதவீதம்
2. அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.53 சதவீதம்
3. மெட்ரிக் பள்ளிகள் 99.05 சதவீதம்
4. இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 95.42 சதவீதம்
5. பெண்கள் பள்ளிகள் 96.89 சதவீதம்
6. ஆண்கள் பள்ளிகள் 88.94 சதவீதம்
பாடவாரியான தேர்ச்சி விகிதம்
1. மொழிப்பாடம் 96.12 சதவீதம்
2. ஆங்கிலம் 97.35 சதவீதம்
3. கணிதம் 96.46 சதவீதம்
4. அறிவியல் 98.56 சதவீதம்
5. சமூக அறிவியல் 97.07 சதவீதம்
* தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கரின் மொத்த எண்ணிக்கை
4816 . தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 4395.
* தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 152. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 110.